Home /News /entertainment /

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு... நடிகை மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு... நடிகை மீரா மிதுனுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட்

மீரா மிதுன்

மீரா மிதுன்

Meera Mithun: மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

விஜய் டிவி டிடி-க்கு வளைகாப்பு?

இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Pandian Stores: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் - நன்றி சொன்ன குழுவினர்!

மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published:

Tags: Actress Meera Mithun, Chennai High court

அடுத்த செய்தி