லியோ படத்தின் படங்கள் / வீடியோ கசிந்த விவகாரத்தில் தயாரிப்பு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' எனப் பெயரிடப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் 'தளபதி 67' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஒட்டுமொத்த குழுவும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில், படப்பிடிப்பின் சில படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கசிந்த படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்று படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை எச்சரித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம், "நடிகர் விஜய்யின் லியோ எனும் தளபதி 67 ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் / வீடியோக்கள் கசிந்ததை பகிர வேண்டாம். விதிமீறல் லிங்குகள் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் உடனடியாக நீக்கப்படும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Refrain from sharing the leaked pics/videos taken from the shooting spot of @actorvijay’s #Leo Aka #Thalapathy67.
The infringing links will be removed immediately without any further warning !@Dir_Lokesh @7screenstudio #LalitKumar @TheRoute @Jagadishbliss @MassBunk_Anti pic.twitter.com/XRfhZ0JXSS
— MassBunk Antipiracy (@MassBunk_Anti) February 12, 2023
விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான், மிஷ்கின், மேத்யூ தாமஸ், அர்ஜுன் சர்ஜா என பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் உள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 19, 2023 அன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.