• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • AR Rahman: ரஹ்மானுடன் பேச வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு!

AR Rahman: ரஹ்மானுடன் பேச வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு!

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

நீங்கள் ரஹ்மான் ரசிகரா? உங்களுக்கு சிறப்பாக பாட வருமா? அப்படியானால் ரஹ்மானுடன் உரையாடப் போகும் அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

  • Share this:
    நீங்கள் ரஹ்மான் ரசிகரா? உங்களுக்கு சிறப்பாக பாட வருமா? அப்படியானால் ரஹ்மானுடன் உரையாடப் போகும் அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

    விஷயம் இதுதான். ரஹ்மான் 99 சாங்ஸ் என்ற படத்தின் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்திருக்கிறார் அல்லவா. அப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். 99 சாங்ஸ் படப்பாடல்களில் உங்களுக்கு எந்தப் பாடல் பிடிக்குமோ அதனை பாடி ஒலிப்பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழியாகவும் இருக்கலாம். பாடலை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் #99SongsCoverStar என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பதிவேற்ற வேண்டும். ரஹ்மானையும் (@arrahman) நீங்கள் டேக் செய்ய வேண்டும்.

    இந்தப் போட்டியில் பத்து வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் ரஹ்மான் மற்றும் 99 சாங்ஸ் படக்குழுவுடன் காணொலியில் உரையாட வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் தொழில்முறை பாடகராகதான் இருக்க வேண்டும் என்பதில்லை. பாத்ரூம் பாடகராக இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ரஹ்மானுடன் உரையாடலாம். அப்புறம் என்ன, ஸ்டார்ட் மியூசிக்...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: