ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''அப்போ நான் விஜய் படம்லாம் பார்க்க மாட்டேன்'' - வாரிசு வெற்றிவிழாவில் ஓபனாக பேசிய விடிவி கணேஷ்!

''அப்போ நான் விஜய் படம்லாம் பார்க்க மாட்டேன்'' - வாரிசு வெற்றிவிழாவில் ஓபனாக பேசிய விடிவி கணேஷ்!

விஜய்

விஜய்

கேரளாவுல திலீப் படத்துக்கு நடிக்க போயிருந்தேன். எனக்கு பாடிகார்டா ஒருத்தர் இருந்தார். அவர் என்கிட்ட கையை காட்டுனார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், தமன், நடிகை சங்கீதா போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் வம்சி, . எல்லோரும் என்னை தெலுங்கு இயக்குநர்னு சொல்லிட்டு இருந்தீங்க. அது என்னை காயப்படுத்தியது. நான் தமிழோ தெலுங்கோ இல்லை. நான் ஒரு நல்ல மனிதன். இன்னைக்கு தமிழ் மக்கள் அவங்க நெஞ்சில் ஒரு சிறிய இடம் கொடுத்திருக்கீங்க. அதற்கு நன்றி. இதுபோதும் எனக்கு என்று உருக்கமாக பேசினார்.

இந்த நிலையில் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேசிய விடிவி கணேஷ், ''இயக்குநர் வம்சி பேசும்போது என்னை தெலுங்குனு சொல்றாங்கனு ஃபீல் பண்ணார். எங்க தமிழ் ஆளுங்களுக்கு ஒருத்தர பிடிச்சிருந்திருச்சுனா விடவே மாட்டோம். தூக்கிட்டு போய்டுவோம். அதுதான் எங்க தமிழர்களோட ஸ்பெஷாலிட்டி. எல்லோரையும் வாழ வைப்போம். உலகம் எல்லாம் தமிழ் ஆளுங்க இருக்காங்க.

இப்போ கர்நாடகாவில் ஷூட்டிங் போய்ட்டு வரேன். அங்க படம் ஹிட்டு. கேரளாவுல இந்தப் படத்தை கொண்டாடுறாங்க. அங்க இருக்க ஹீரோஸ் எல்லாம், ஓ விஜய் சார் படமா ? வரட்டும் என ஏத்துக்கிறாங்க. வாரிசு படத்தையும் அவங்க படமா பார்க்குறாங்க.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி என் பொண்ணை சினிமாவுக்கு கூப்பிட்டு போனேன். அப்போ நான் விஜய் படம்லாம் பார்க்க மாட்டேன். போக்கிரினு ஒரு படம். படம் பார்க்க, பார்க்க ரொம்ப பிடிச்சது. அதுக்கு அப்றோம் தொடர்ச்சியா அவர் படம் பார்க்க ஆரம்பிச்சோம். இப்போ நான் பயங்கரமான விஜய் ரசிகன். அவர் படத்துலயே நடிக்கும்போது இன்னும் சந்தோஷமா இருக்கு.

கேரளாவுல திலீப் படத்துக்கு நடிக்க போயிருந்தேன். எனக்கு பாடிகார்டா ஒருத்தர் இருந்தார். அவர் என்கிட்ட கையை காட்டுனார். அதுல ரொம்ப பெரியதாக விஜய்யின் பெயரை பச்சைகுத்திருக்கார். பின்னர் டிஷர்ட்டை கழட்டி முதுகை காட்டினார். முதுகுல பெருசா விஜய் பெயரை பச்சை குத்திருந்தார் வீட்டில் கேட்க மாட்டாங்களானு கேட்டேன். டை ஹார்டு விஜய் ஃபேன் சார் என்றார். அந்த அளவுக்கு விஜய் மேல் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பேசினார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu