Home /News /entertainment /

VTK: சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை... சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை வாழ்த்திய பிரபலங்கள்!

VTK: சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை... சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை வாழ்த்திய பிரபலங்கள்!

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக, சிம்பு - கௌதம் மேனன் - ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிம்புவின் வெந்து தணிந்தது படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சித்தி இதானி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

    விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக, சிம்பு - கௌதம் மேனன் - ரஹ்மான் ஆகியோர் இணைந்து இந்த திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். ஆகையால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நயன்தாராவின் அம்மாவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த அன்பு முத்தம்!

    இந்நிலையில் இன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.



    வெந்து தணிந்தது காடு குறித்து நிறைய நல்ல செய்திகளைக் கேட்க முடிகிறது. படம் பார்க்க அவலுடன் காத்திருக்கிறேன், என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.



    சிம்புவுக்கும், கெளதம் மேனனுக்கும் நடிகர் சூரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    வெந்து தணிந்தது காடு படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    கடின உழைப்பும் நம்பிக்கையும் என்றும் தோற்பதில்லை நண்பா என சிம்புவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் மஹத்.



    வெந்து தணிந்தது காடு படக்குழுவுக்கு நடிகர் கிருஷ்ணா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    என்னுடைய சகோதரர் சிம்புவுக்கு இதயத்திலிருந்து வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என இசையமைப்பாளர் எஸ்.தமன் தெரிவித்துள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Gautham Vasudev Menon, Simbu

    அடுத்த செய்தி