கனவு நனவானது... 'தளபதி 64' நடிகை ரம்யா நெகிழ்ச்சி!

கனவு நனவானது... 'தளபதி 64' நடிகை ரம்யா நெகிழ்ச்சி!
ரம்யா சுப்ரமணியம்
  • News18
  • Last Updated: November 9, 2019, 12:51 PM IST
  • Share this:
நடிகையும், தொகுப்பாளினியுமான ரம்யா‘தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளார்.

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ரம்யா இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தில் இணைந்தது குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் ரம்யா, தன்னுடைய கனவு நனவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆடை படத்தில் நடித்திருந்த நடிகை ரம்யா, வனமகன், ஓகே கண்மணி, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.படிக்க: 2019-ம் ஆண்டில் அதிக வசூல்... பிகில் வெற்றியை ஆதாரத்துடன் வெளியிட்ட திரையரங்கம்...! 
 

 

 


View this post on Instagram


 

 

 

Yes , Dreams Do Come True ❤️🙏🏻🤩! #Thalapathy64 #WishListGettingDone . . . Working with this wonder team is a memory for lifetime 😇🙌🏻💪🏻✅. @dir_lokeshkanagaraj #ActorVijay @jagadishbliss @anirudhofficial @sathyacinematographer


A post shared by Ramya Subramanian (@ramyasub) on

First published: November 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்