விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த 'நானும் ரௌடி தான்' திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சிதொகுப்பாளராக இருந்தார்.
2020-ம் ஆண்டு இவருக்கு திடீரென ஸ்டோக் ஏற்பட்டு இடது கால், இடது கை செயலிழந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக பலரிடமும் உதவி கோரினர்.
அப்போது மருத்துவமனையில் இருந்த லோகேஷை நேரில் சந்தித்த நடிகர் விஜய் சேதுபதி அவருக்கான மருத்துவ செலவை ஏற்றார். பின்னர் முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிய லோகேஷூக்கு மண்டைஓடு மாற்று அறுவை சிகிச்சையும் முடிந்து பூரண குணமடைந்தார்.
இந்நிலையில் தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவிய நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி நன்றி தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் லோகேஷ் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், லோகேஷ் உடன் கேக் வெட்டும் விஜய் சேதுபதி, நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.