நடிகை சித்ரா மரண வழக்கை திசை திருப்புவதற்காக ஹேம்நாத் பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் சொல்லி வருவதாகவும், வழக்கை காவல் துறை நியாயமான முறையில் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றும் சித்ராவின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர் இந்த வழக்கின் விசாரணையை முடித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த நிலையில், ஹேம்நாத் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஹேம்நாத் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தார்.
21-வது பிறந்தநாளில் இளம் நடிகை தற்கொலை... விசாரணை வளையத்திற்குள் கணவர்
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் பெற்றோர், பொய்யான தகவல்களை ஹேம்நாத் பரப்பி வருவதாகவும், வழக்கிலிருந்து தப்பிக்க இதுபோன்று வதந்தி பரப்புவதாகவும் தெரிவித்துள்ளனர். சித்ரா மரண வழக்கை மறுவிசாரணை நடத்துவது தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் கூறினர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.