• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய தொகுப்பாளினி - வீடியோ

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய தொகுப்பாளினி - வீடியோ

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

  • Share this:
    மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் பரதநாட்டியமாடியுள்ளார்.

    விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

    இவர்களுடன் அர்ஜுன் தாஸ், ஆன்ட்ரியா, கவுரி கிஷான், தீனா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தொகுப்பாளினி பாவனா, வித்தியாசமான முறையில் இந்தப் பாடலுக்கு பரதநாட்டியமாடி அசத்தியுள்ளார். அதை வீடியோவாகவும் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவுடன் கற்பனை வளத்துடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். சம்யுக்தாவுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலின் கிளாசிக்கல் பதிப்பை உங்களுக்காக பதிவிட்டுள்ளேன். திரையில் நடிகர் விஜய் இந்தப் பாடலுக்கு நடனமாட இருப்பதைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை.” என்று கூறியுள்ளார்.



    மாஸ்டர் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் விஜய், அனிருத், சாந்தனுவுடன் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்...!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: