சன் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை துவங்கியவர் விஜே அர்ச்சனா. தொடர்ந்து ஜி தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இவர் வினித் என்பவரை கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷாரா என்ற மகள் உள்ளார்.
அர்ச்சனாவும் ஷாராவும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படம் அவர்களுக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அர்ச்சனா கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவருடன் விவாகரத்து வரை சென்றதாக தெரிவித்திருந்தார். அவர் பேசியதாவது, எனக்கும் என் கணவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்தோம். 15 நாட்களுக்கு முன் என் கணவருக்கு திடீரென விசாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது.
#VjArchana About Her Divorce Decision pic.twitter.com/tDtwXgVT5p
— chettyrajubhai (@chettyrajubhai) March 10, 2023
அப்போது எங்கள் மகள் ஷாரா எங்கள் இருவரையும் அமர வைத்து பேசினார். நீங்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவரால் வாழ முடியுமா என யோசித்து பாருங்கள் என்றார். அதன் பிறகு 20 வருடங்களுக்கு முன்பு எப்படி சந்தித்து காதலித்தோமோ அதை போல தான் 15 நாட்களாக இருந்து வருகிறோம். அவரை என்னால் பிரியமுடியவில்லை என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv