சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நகைச்சுவை நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விஜே அர்ச்சனா. பின்னர் தொடர்ந்து ஜி தமிழ் டிவியின் பிரதான தொகுப்பாளராக இருந்துவந்தார். கலகலப்பாக அவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
பின்னர் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் தனது மகளுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் அர்ச்சனா நடித்திருந்தார். டாக்டர் படம் பெரும் வெற்றிபெற்றதுடன் அர்ச்சனாவின் நடிப்பும் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
தனது யூடியூப் பக்கத்தில் தனது மகளுடன் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பிரபலங்கள் பலரும் தங்கள் ஹோம் டூர் வீடியோவை பகிர்ந்தபோது அர்ச்சனா சற்று வித்தியாசமாக பாத்ரூம் டூர் வீடியோவைப் பகிர, ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
#VjArchana Replied To Student Who Troll Her Bathroom Tour pic.twitter.com/oTus0hPcww
— chettyrajubhai (@chettyrajubhai) February 10, 2023
இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் விஜே அர்ச்சனா கலந்துகொண்டு பேசினார். அப்போது அங்கிருந்த மாணவர் பாத்ரூம் டூர் என கமெண்ட் செய்ய அதற்கு அர்ச்சனா பொறுமையாக பதிலளித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, பாத்ரூம் காட்டுவது தவறு கிடையாது. உன் பாத்ரூம் காட்டும் நிலையில் இருந்தால் காட்டலாம் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது இந்தக் கல்லூரி தான்.
நான் எப்படி மலம் கழிக்கிறேன் என்பதைக் காண்பிக்கவில்லை. நான் பாத்ரூமை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதையே காண்பித்தேன். ஏனென்றால் பெரும்பாலும் நம் படுக்கை அறையில் தான் பாத்ரூம் இருக்கிறது. நான் விரும்பியதை செய்ய கற்றுக்கொடுத்தது இந்தக் கல்லூரி தான். எனக்கு வரும் கேலி கிண்டல்களைத் தாண்டி சிங்கப்பெண் போன்று நீங்க கதறுங்கடா, நான் என் வேலையை செய்கிறேன் என்று தைரியத்தை கொடுத்த உங்களுக்கு என் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Social media, Troll