'விவேக் தடுப்பூசி போட்டதை தொடர்புபடுத்தாதீர்கள்' - குஷ்பூ வேண்டுகோள்

'விவேக் தடுப்பூசி போட்டதை தொடர்புபடுத்தாதீர்கள்' - குஷ்பூ வேண்டுகோள்

குஷ்பூ

தயவுசெய்து விவேக் நேற்று தடுப்பூசி போட்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்புபடுத்த வேண்டாம் என நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தயவுசெய்து விவேக் நேற்று தடுப்பூசி போட்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்பு படுத்த வேண்டாம் என நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக் குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சுயநினைவோடு உள்ளார் என மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் நலம் பெற்று வர வேண்டுவதாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    தவிர விவேக் நேற்று தான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்” எனத் தெரிவித்து இருந்தார்.

     

     



    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் குஷ்பூ, தயவுசெய்து விவேக் நேற்று தடுப்பூசி போட்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் தொடர்புபடுத்த வேண்டாம். இரண்டுக்கும் தொடர்பில்லை. மருத்துவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். தயவுசெய்து நீங்கள் சென்று தடுப்பூசி போடுங்கள். வதந்திகள் மற்றும் சுய அனுமானங்களால் திசைதிருப்ப வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sankaravadivoo G
    First published: