ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விவேக் மரணம்... அவர் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள 3 தமிழ் படங்கள்

விவேக் மரணம்... அவர் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள 3 தமிழ் படங்கள்

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

நடிகர் விவேக் நேற்று மரணமடைந்த நிலையில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ள தமிழ்ப் படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் நேற்று அதிகாலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் வந்து அஞ்சலி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அவரது விருகம்பாக்கம் வீட்டில் இருந்து இறுதி யாத்திரை தொடங்கிய போதும் ஏராளமான ரசிகர்கள் அதில் கலந்து கொண்டு கண்ணீருடன் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் விவேக்கின் உடல் தமிழக காவல்துறையினரின் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் விவேக் நடிப்பில் கடைசியாக தாராள பிரபு என்ற திரைப்படம் வெளியானது. ஹரிஷ் கல்யாண் உடன் டாக்டர் கண்ணதாசன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் விவேக். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நடிகர் விவேக் இவ்வுலகை விட்டு விடைபெற்றிருக்கும் நிலையில் அவர் நடிப்பில் அடுத்ததாக 3 படங்கள் திரைக்கு வர உள்ளன.

நடிகர் விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக விவேக் இணைந்து நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. வெங்கட கிருஷ்ணா ரோஹாந்த் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் விவேக் நடித்து வந்தார். அவரது காட்சிகள் ஏற்கெனவே படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அதேவேளையில் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்திருக்கும் காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து அந்தக் காட்சிகளை அப்படியே ஷங்கர் பயன்படுத்துவாரா அல்லது விவேக்கின் கதாபாத்திரத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Vivek, Kollywood