மதுரை ராமு தாத்தா பற்றி அறியாதவர்களுக்காக... நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவு

மதுரையில் 1967-ஆம் ஆண்டு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்குவதில் தொடங்கி 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வந்த ஏழைகளின் அட்சயபாத்திரம் ராமு தாத்தா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

மதுரை ராமு தாத்தா பற்றி அறியாதவர்களுக்காக... நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவு
மதுரை ராமு தாத்தா பற்றி அறியாதவர்களுக்காக
  • Share this:
உயிரிழந்த மதுரை ராமு தாத்தா குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரையில் 1967-ஆம் ஆண்டு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்குவதில் தொடங்கி 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வந்த ஏழைகளின் அட்சயபாத்திரம் ராமு தாத்தா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இது குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”மதுரை ராமு தாத்தா! உங்கள் உடல் மரிக்கலாம்; நீங்கள் போட்ட உணவு செரிக்கலாம்; ஆனால் உங்கள் நினைவு பசியாறியவர் நெஞ்சில் நீங்காமல் நிலைக்கும்! (17 வயதில் வடலூர் வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு இவ்வாறு வாழ்ந்திருக்கிறார்) தன் தொழிலை சேவையாக மாற்றும் அனைவரும் தெய்வங்களே!!! வீரமும் ஈரமும் நிரம்பிய மண் அல்லவா மதுரை!”என ட்வீட் செய்துள்ளார்.

மேலும் மதுரை ராமு தாத்தா பற்றி அறியாதவர்களுக்காக என வாட்ஸ் ஆப்பில் அவரது நண்பர் அனுப்பிய தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ :  10 ரூபாய்க்கு சாப்பாடு.. ஏழைகளின் அட்சயபாத்திரம் மதுரை ராமு தாத்தா காலமானார்..
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading