முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகள் நீக்கப்படுகிறதா?

இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகள் நீக்கப்படுகிறதா?

இந்தியன் 2

இந்தியன் 2

இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தனுஷ்கோடியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபலமான நகைச்சுவை நடிகர் விவேக், ஏப்ரல் 2021-ல் மாரடைப்பால் காலமானார். அவரின் திடீர் மறைவு சினிமா துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவர் அப்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றிய விவேக், 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனுடன் திரையைப் பகிர்ந்துக் கொண்டார். ஆனால் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் உலகை விட்டு மறைந்தார் விவேக். எனவே, 'இந்தியன் 2' படத்தில் விவேக்கின் காட்சிகள் மாற்றப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவரது பகுதிகள் அகற்றப்படவோ மாற்றப்படவோ மாட்டாது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவேக்கின் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக மாறியிருக்கிறது. ஏனெனில் மறைந்த நடிகரை வெள்ளித்திரையில் மீண்டும் ஒரு முறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கிடையே விவேக் நடித்த காட்சிகளுக்கு யார் டப்பிங் பேசுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் இப்படத்தில் கிட்டத்தட்ட 6 வில்லன்கள் நடிப்பதாகவும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தனுஷ்கோடியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பிரபலங்கள்!

ஷங்கர் இயக்கத்தில், 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன் ஒரு பவர்ஃபுல் பாத்திரத்தில் நடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vivek