ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஸ்வர்யா ராயுடனான காதலை தூசி எனக் குறிப்பிட்ட விவேக் ஓபராய்

ஐஸ்வர்யா ராயுடனான காதலை தூசி எனக் குறிப்பிட்ட விவேக் ஓபராய்

விவேக் ஓபராய் - ஐஸ்வர்யா ராய்

விவேக் ஓபராய் - ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராயுடன் காதலை முறித்த பிறகு, திருமணம் ஆகும் வரை விவேக் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் வெளியில் பேசவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் உடனான காதலை தூசி தட்டப்பட்ட விஷயம் எனக் கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்.

முன்பு ஐஸ்வர்யா ராயுடன் உறவில் இருந்த விவேக் ஓபராய், சமீபத்தில் இது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், இளைஞர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். நேர்காணல் ஒன்றில், விவேக்கிடம் தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராய் உடனான உறவைப் பற்றி பொதுவெளியில் கூறியிருப்பாரா எனக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விவேக், ”இந்த கேள்விக்கு பதில் சொல்லப்போவதில்லை. ஏனெனில் அது முடிந்து தூசி தட்டப்பட்டது. இருப்பினும், திறமையான இளைஞர்கள் உண்மையிலேயே தங்கள் பணியில் கவனம் செலுத்தி, நூற்றுக்கு நூறு வீதம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால், உங்கள் கரியரை தாக்கும் வாய்ப்பை யாருக்கும் கொடுக்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, அதிக கவனம் செலுத்துங்கள். ஒருவர் தனக்கும், தொழிலுக்குமான அர்ப்பணிப்புக்கும் ஒருபோதும் அவதூறு செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டார்.

விஜய் டிவி-யின் பல ஹிட் சீரியல்களின் இயக்குநர் மரணம் - சோகத்தில் சின்னத்திரை

ஐஸ்வர்யா ராயுடன் காதலை முறித்த பிறகு, திருமணம் ஆகும் வரை விவேக் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் வெளியில் பேசவில்லை. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மக்கள் பேசுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதை வெளியில் பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது என பாலிவுட் ஊடகத்திடம் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Aishwarya Rai, Bollywood