மலையாள படத்தில் பிருத்விராஜுடன் மோதும் விவேக் ஓபராய்!

விவேக் ஓபராய் - பிரித்விராஜ்

மலையாளத்தில் தயாராகும் கடுவா படத்தில் பிருத்விராஜுடன் நடிக்கிறார் விவேக் ஓபராய். இது இவரது இரண்டாவது மலையாளப் படமாகும்.

 • Share this:
  மலையாளத்தில் தயாராகும் கடுவா படத்தில் பிருத்விராஜுடன் நடிக்கிறார் விவேக் ஓபராய். இது இவரது இரண்டாவது மலையாளப் படமாகும்.

  இந்தி அல்லாத மொழிகளில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் இந்திப் படங்களில் சிறு வேடங்களில் நடித்த காலம் மலையேறிவிட்டது. இந்தியின் முன்னணி நடிகர்கள் பிற மொழிகளில் வில்லன்களாக நடிக்கும் காலமிது. 2.0 படத்தில் அக்ஷய் குமார், விவேகத்தில் விவேக் ஓபராய், விரைவில் வெளிவர இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கான் என முன்னணி நடிகர்களே குணச்சித்திரம், வில்லன் என்று நடிக்கிறார்கள்.

  மலையாளப் பட உலகம் தமிழ், தெலுங்குடன் ஒப்பிடுகையில் மிகச்சிறியது. அங்கு தயாரான லூசிபர் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்தார். அவரது முதல் மலையாள திரைப்படமாக அது அமைந்தது. பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் 150 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

  தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் கடுவா என்ற படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். கடுவா என்றால் மலையாளத்தில் புலி என்று அர்த்தம். ஆக்‌ஷன் திரைப்படமான இதில் இயக்குநரும் நடிகருமான தில்லீஷ் போத்தன், சித்திக், சம்யுக்தா மேனன், அஜு வர்க்கீஸ், சாய்குமார், சீமா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். கடுவாயில் விவேக் ஓபராயும் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். அவர் இதில் வில்லனாக நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

  கடுவா கதையை ஜினு ஆபிரஹாம் எழுத, மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கிறார். சரத்குமார், ராதிகா மீதுள்ள செக் மோசடி வழக்கில் லிஸ்டின் ஸ்டீபனின் பெயரும் உண்டு என்பது முக்கியமானது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: