Home /News /entertainment /

முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர் விவேக்கின் மனைவி உருக்கமான கோரிக்கை… நிறைவேற்றுமா தமிழக அரசு?

முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர் விவேக்கின் மனைவி உருக்கமான கோரிக்கை… நிறைவேற்றுமா தமிழக அரசு?

முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கும் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி.

முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கும் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி.

முதல்வர் உடனான இந்த சந்திப்பின்போது, விவேக்கின் மகள் அமிர்தா நந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்க நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

மறைந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்.

ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரைத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவேன் என்பதை இலக்காக கொண்டு நடிகர் விவேக் செயல்பட்டு வந்தார்.

இதையும் படிங்க - மே தினத்தன்று எந்தெந்த சேனலில் என்னென்ன சிறப்பு திரைப்படம்? முழு லிஸ்ட்!

அவர் விட்டுச் சென்ற பணியை இன்று பல்வேறு நபர்கள் அவருக்காக மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சமூக ஆர்வம் கொண்ட விவேக்கின் இழப்பு, திரைத் துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிற்கே இழப்பாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் அவரது மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் படிங்க - கே.ஜி.எஃப் சாப்டர் 2 : 4-வது பாடலாக ‘மான்ஸ்டர்’ ரிலீஸ்… ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்

அதில் நடிகர் விவேக் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். முதல்வர் உடனான இந்த சந்திப்பின்போது, விவேக்கின் மகள் அமிர்தா நந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்க நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் திரைத்துறையினரும் விவேக்கின் ரசிகர்களும் உள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Actor Vivek

அடுத்த செய்தி