78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம்

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது

 • Share this:
  மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

  சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நடிகர் விவேக் நேற்று காலை 11 மணியளவில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். விவேக்கின் மனைவியும் மகளும் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவரது இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  விவேக்கிற்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அவருக்கு எக்மோ கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு விவேக் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

  ActorVivek
  நடிகர் விவேக்


  விவேக் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர்.பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து  78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் பத்மஸ்ரீ விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.

   

   
  Published by:Sankaravadivoo G
  First published: