சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இந்திய திரை நட்சத்திரங்களான அனுராக் காஷ்யப், வருண் தவான், கரண் ஜோகர், நடிகர் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ரீநிதி ஷெட்டி, பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆண்டு வெளியான படங்கள் குறித்த தங்கள் பார்வையை வெளிப்படுத்தினர்.
அப்போது பேசிய அனுராக் காஷ்யப் காந்தாரா, புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற பிரம்மாண்ட படங்களைப் பார்த்து அதே போன்று மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்க திட்டமிடுவது நம்மை அழிவை நோக்கி அழைத்து செல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.
I totally totally totally disagree with the views of Bollywood’s one & only Milord.
Do you agree? pic.twitter.com/oDdAsV8xnx
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) December 13, 2022
அனுராக் காஷ்யப்பின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் பேசியதைப் பகிர்ந்து, பாலிவுட்டின் முக்கிய இயக்குநர் இப்படிப் பேசியிருப்பதற்கு நான் உடன்படவில்லை. உங்களது கருத்து என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னிந்திய படங்கள் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில் பிரம்மாஸ்திரா, லால் சிங் சத்தா என பாலிவுட்டில் பெரும் பொருட் செலவில் உருவாகிவரும் படங்கள் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்து வருகிறது. இந்த நிலை பாலிவுட் நட்சத்திரங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அனுராக் காஷ்யப் பேசியிருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.