ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தி காஷ்மீர் ஃபைல்ஸ் பொய்யென நிரூபித்தால் படம் இயக்குவதை விட்டு விடுகிறேன் - விவேக் அக்னிஹோத்ரி சவால்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் பொய்யென நிரூபித்தால் படம் இயக்குவதை விட்டு விடுகிறேன் - விவேக் அக்னிஹோத்ரி சவால்

விவேக் அக்னிஹோத்ரி

விவேக் அக்னிஹோத்ரி

பயங்கரவாத அமைப்புகள், நகர்ப்புற நக்சல்கள் மற்றும் நாட்டைப் பிரிக்க நினைக்கும் ‘துக்டே-துக்டே’ கும்பல் தான் இதுபோல் சொல்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இஸ்ரேலிய திரைப்பட இயக்குநர் நதவ் லாபிட் உள்ளிட்ட அறிவாளிகள் தனது படத்தில் காட்டப்பட்டுள்ள நிகழ்வுகள் தவறானவை என்பதை நிரூபிக்க முடிந்தால், திரைப்படம் இயக்குவதை கை விடுவதாக "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

IFFI இன் சர்வதேச நடுவர் குழுவின் தலைவர் லாபிட், "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" வன்மம் நிறைந்த பொய்பிரச்சாரம் என்று குறிப்பிட்டதும், அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது எதிர்ப்பாளர்களுக்கு சவால் விடுத்தார்.

"தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தின் எந்த ஷாட், டயலாக் அல்லது நிகழ்வும் முழுதாக உண்மையல்ல என்பதை நிரூபிக்க முடியுமா என, உலக அறிவாளிகள் மற்றும் 'நகர்ப்புற நக்சல்கள்' மற்றும் இஸ்ரேலில் இருந்து வந்த சிறந்த திரைப்பட இயக்குநருக்கும் நான் சவால் விடுகிறேன். நான் எப்போதும் பின்வாங்குபவன் அல்ல. தொடர்ந்து போராடுவேன், என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாத அமைப்புகள், நகர்ப்புற நக்சல்கள் மற்றும் நாட்டைப் பிரிக்க நினைக்கும் ‘துக்டே-துக்டே’ கும்பல் போன்றவர்கள் அடிக்கடி இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறார்கள்” என்றும் தனது வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

விக்ரம், பார்வதி, பா.ரஞ்சித்தின் தங்கலான் செல்ஃபி!

அதோடு தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காட்டப்பட்டவை பொய் என நிரூபித்தான் தான் படம் இயக்குவதை கைவிடுவதாகவும் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: