முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இந்து மத சடங்கு அவமதிப்பா? சர்ச்சையில் சிக்கிய அமீர்கான் நடித்த விளம்பரம்!

இந்து மத சடங்கு அவமதிப்பா? சர்ச்சையில் சிக்கிய அமீர்கான் நடித்த விளம்பரம்!

விளம்பரம்

விளம்பரம்

அமீர்கானும், கியாரா அத்வானியும் சேர்ந்து சமீபத்தில் வங்கி விளம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கி விளம்பரத்தில் நடித்துள்ள அமீர்கானும், கியாராவும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளனர். சோஷியல் மீடியாவில் பலரும் அவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் அமீர்கானும், கியாரா அத்வானியும் சேர்ந்து சமீபத்தில் வங்கி விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். மக்களிடையே வரவேற்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியாசமாக யோசித்து எடுக்கப்பட்ட அந்த விளம்பரம் எதிர்பாராத சர்ச்சையில் சிக்கியுள்ளது. காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விளம்பரத்துக்கு எதிராக குரல் கொடுக்க மேலும் கவனம் பெற்றுள்ளது அந்த விளம்பரம்

Also Read: கணவருக்குக் கிடைத்த ஃபிலிம்பேர் விருதுடன் உருக்கமாக பதிவிட்ட மேகனா ராஜ்

என்ன விளம்பரம்?

அந்த விளம்பரத்தில் இந்து மதப்படி திருமணம் ஆன மணமகனும், மணமகளும் சொந்த வீட்டுக்கு வருகின்றனர். புதுமண தம்பதி வீட்டுக்குள் வரும்போது முதலில் மணமகள் வருவதும், வலதுகாலை எடுத்து வைத்து வருவதும் கடைபிடிக்கப்படும் வழக்கம். ஆனால் இந்த விளம்பரத்தில் மணமகனான அமீர்கான் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே வருகிறார். இதுதான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பதிவிட்டுள்ள காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர், சமூக மற்றும் மத மரபுகளை மாற்றுவதற்கு வங்கிகள் எப்போது பொறுப்பாகின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விளம்பரம் குறித்து பதிவிட்டுள்ள பலரும் ஏன் இந்து மத சடங்குகளை மாற்றவே குறி வைத்து விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன எனப்பதிவிட்டு வருகின்றனர். அந்த குறிப்பிட்ட வங்கிக்கு எதிராகவும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: சினிமா ரசிகர்களே ரெடியா? இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் படங்கள்! முழு லிஸ்ட்!

அமீர்கானுக்கும், கியாராவுக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் இந்த விளம்பரத்துக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். அனைத்து விவகாரங்களையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை, விளம்பரம் சொல்ல வந்த உள்கருத்தை மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Aamir Khan, Kiara Advani