விஸ்வாசம் உரிமையைப் பெற்ற ‘சர்கார்’ பட நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

news18
Updated: December 7, 2018, 1:40 PM IST
விஸ்வாசம் உரிமையைப் பெற்ற ‘சர்கார்’ பட நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஸ்வாசம் பட போஸ்டர்
news18
Updated: December 7, 2018, 1:40 PM IST
விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி.இமான்.

ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடுதலாக படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதையடுத்து படத்தின் முதல் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்தப் படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.முன்னதாக விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ் (A and P groups) எனும் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்திருந்தது. இந்த நிறுவனம் சர்கார் பட உரிமையையும் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...