விஸ்வாசம் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்த படக்குழு!

வெளியான அஜித் படங்களிலேயே விஸ்வாசம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.20 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்ததாகவும் திரையுலக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

news18
Updated: February 11, 2019, 6:16 PM IST
விஸ்வாசம் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்த படக்குழு!
விஸ்வாசம் படக்குழு
news18
Updated: February 11, 2019, 6:16 PM IST
விஸ்வாசம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அஜித் - சிவா கூட்டணியில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், அவருக்கு மகளாக அனிகாவும் நடித்திருந்தனர். இவர்களுடன் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலைக் குவித்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே இமான் இசையில் உருவான பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

வெளியான அஜித் படங்களிலேயே விஸ்வாசம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டிருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் ரூ.20 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு லாபம் கொடுத்ததாகவும் திரையுலக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த ஒரு தமிழ் நடிகர்களின் படமும் இந்த அளவு லாபத்தை விநியோகஸ்தர்களுக்கு கொடுத்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேக்கிங் வீடியோவில் நடிகர் அஜித் இடம்பெற்றிருக்கும் காட்சிகளை பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு வேண்டும் - வீடியோ

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...