கொண்டாட்டத்தின்போது சரிந்த அஜித் கட் அவுட் - காயமடைந்த ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் படத்தை வரவேற்கும் விதமாக 60 அடி உயரத்துக்கு அஜித் உருவ கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

news18
Updated: January 10, 2019, 1:10 PM IST
கொண்டாட்டத்தின்போது சரிந்த அஜித் கட் அவுட் - காயமடைந்த ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த அஜித் ரசிகர்கள்
news18
Updated: January 10, 2019, 1:10 PM IST
விழுப்புரத்தில் அஜித் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தபோது சரிந்து விழுந்ததில் ரசிகர்கள் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையா, ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இன்று வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் குடும்பத்தின் அவசியத்தைப் பேசும் படமாக அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் படத்தை வரவேற்கும் விதமாக 60 அடி உயரத்துக்கு அஜித் உருவ கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

படம் வெளியான முதல் நாளான இன்று கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் சிலர் கட் அவுட் மீது ஏறினார்கள். அஜித் கட் அவுட்க்கு மாலை அணிவித்து பிறகு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது மேலும் சில அஜித் ரசிகர்கள் கட் அவுட் மீது ஏறினார்கள்.

இதனால் பாரம் தாங்காமல் அஜித் கட் அவுட் அப்படியே சரிந்தது. இதை எதிர்பாராத அஜித் ரசிகர்கள் சிலர் உடனடியாக கீழே குதித்தார்கள். இந்தச் சம்பவத்தில் 6 அஜித் ரசிகர்கள் படுகாயமடைந்துள்ளனர். 6 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
VIDEO: மாலை போடும் போது சரிந்து விழுந்த விஸ்வாசம் கட் அவுட் - ரசிகர்கள் படுகாயம்

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...