உயர் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக மின்னும் ’விஸ்வாசம்’ அஜித்: ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழகத்தில் வெளியாகும் படத்துக்கு எல்.இ.டி. கட் அவுட் வைப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

news18
Updated: January 9, 2019, 6:52 PM IST
உயர் தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக மின்னும் ’விஸ்வாசம்’ அஜித்: ரசிகர்கள் கொண்டாட்டம்
விஸ்வாசம் எல்.இ.டி. கட் அவுட்
news18
Updated: January 9, 2019, 6:52 PM IST
விஸ்வாசம் படம் நாளை ரிலீசாக உள்ள நிலையில் அஜித்துக்கு பிரமாண்ட எல்.இ.டி. கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா 'நிரஞ்சனா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் அஜித்தின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் படம் வெளியாகும் நாளை ரசிகர்கள் தங்களுக்கான கொண்டாட்டமாக முன்னெடுத்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பே பெரும்பாலான திரையரங்குகளின் வாயில்களை அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட்கள் ஆக்கிரமித்துள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் விஸ்வாசம் அஜித்துக்கு எல்.இ.டி. கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி தோன்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை தமிழில் வெளியான உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு வானுயர கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள் தற்போது உயர் தொழில்நுட்பத்துக்கு மாறியுள்ளனர். தமிழகத்தில் வெளியாகும் படத்துக்கு எல்.இ.டி. கட் அவுட் வைப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்த கட் அவுட்டை அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.அஜித்- விஜய் ரசிகர்களின் சமூகவலைதள மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், விஸ்வாசம் படம் வெற்றியடைய விஜய் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.பேட்ட VS விஸ்வாசம்... ரிலீஸுக்கு முன்னரே லாபத்தை ஈட்டும் திரைப்படம் - வீடியோ

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...