விஸ்வாசம் படத்தின் கதை தெலுங்கு பட காப்பியா?

விஸ்வாசம் படத்தின் மையக்கரு, தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான துளசி படத்தின் மையக்கருவுடன் ஒத்துபோவது நாளடைவில் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rakesh Prabhakar | news18
Updated: January 10, 2019, 5:23 PM IST
விஸ்வாசம் படத்தின் கதை தெலுங்கு பட காப்பியா?
அஜித்துடன் நயன்தாரா
Rakesh Prabhakar | news18
Updated: January 10, 2019, 5:23 PM IST
விஸ்வாசம் படத்தின் கதையும் தெலுங்கில் வெளியான ‘துளசி’ படத்தின் கதையும் ஒரே மாதிரி அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்நிலையில் இன்று வெளியான இத்திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் வெகுஜன ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க விஸ்வாசம் படத்தின் மையக்கரு, தெலுங்கில் வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான துளசி படத்தின் மையக்கருவுடன் ஒத்துபோவது நாளடைவில் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா. பின்னர் மகனுக்கு ஒரு பிரச்னை ஏற்பட அதை தந்தை எப்படி குணப்படுத்துகிறார்? மீண்டும் அந்த குடும்பம் எப்படி இணைகிறது என்பது தான் 2007-ம் ஆண்டு வெளியான துளசி படத்தின் மையக்கரு.

இதேதான் இன்று வெளியாகியுள்ள விஸ்வாசம் படத்தின் மையக்கருவும் கூட. 10 வருட இடைவெளி இருப்பதால் திரைக்கதையிலும் ட்ரீட்மெண்டிலும் நிறையவே மாற்றம் செய்திருக்கிறார்கள். ஆனால் மையக்கரு இரண்டு படங்களுக்கும் ஒன்றுதான். ஆனால் டைட்டில் கார்டில் கதையை எழுதியவர்களாக சிவா மற்றும் ஆதி நாராயணனின் பெயர்கள்தான் இடம்பெற்றுள்ளன. இது கூடிய விரைவில் பிரச்னையை கிளப்புமா அல்லது உரிமம் பெற்றுதான் படத்தை எடுத்தார்களா என்பது போகபோகதான் தெரிய வரும்.

-  ராகேஷ் பிரபாகர் - நியூஸ் 18 தமிழ்நாடு
Loading...
உத்தரப்பிரதேசத்தில் மாணவர்கள் மத்தியில் ஆபாச நடனமாடிய தலைமை ஆசிரியர்- வீடியோ

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...