நடிகர், இயக்குநர் விசு மரணம் - ஓபிஎஸ், ரஜினிகாந்த் வைரமுத்து இரங்கல்

நடிகர், இயக்குநர் விசு மரணம் - ஓபிஎஸ், ரஜினிகாந்த் வைரமுத்து இரங்கல்
நடிகர் மற்றும் இயக்குநர் விசு
  • Share this:
இயக்குநரும் நடிகருமான விசுவின் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட விசு இன்று மாலை உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை மாலை நடைபெறும் என்று குடும்பத்தார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்:


என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:

தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான விசு இன்று உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பன்முக திரைக்கலைஞர் விசுவின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!கவிஞர் வைரமுத்து :

விசுவின் மறைவு வேதனை.
கருத்துள்ள கதை, கத்திபோல் உரையாடல்,
நம்பகத் தன்மைமிக்க நாடகம்,
நாகரிகத் திரைக்கதை எல்லாம்
கைவரப் பெற்ற கலைஞன்.
சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி
பாடல் எழுதிய பழைமை மறக்காது.
விசு நீண்டகாலம் நினைக்கப்படுவார்.

மேலும் படிக்க: என்னுடைய பதிவை ஏன் ட்விட்டர் நீக்கியது? - ரஜினி விளக்கம்


First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்