ஓவியா ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன 'சிலுக்குவார்பட்டி சிங்கம்’ டீம்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவியா ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி சொன்ன 'சிலுக்குவார்பட்டி சிங்கம்’ டீம்!
சிலுக்குவார்பட்டி சிங்கம் பட போஸ்டர்
  • News18
  • Last Updated: November 30, 2018, 8:51 PM IST
  • Share this:
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ராட்சசன் திரைப்படம், விஷ்ணு விஷாலின் கேரியரிலேயே சிறந்த படம் என்ற பெயரை எடுத்தது . அதுமட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்துள்ளார்.

மேலும் நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். யோகி பாபு இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.





இந்தப் படம் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வருவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். மேலும் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் மார்கெட்டில் பொருட்கள் வாங்கிவிட்டு பணம் தராமல் அடாவடி - வீடியோ

First published: November 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading