ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்?

விஷ்ணு - தனுஷ்

விஷ்ணு - தனுஷ்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

2017-ல் பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய தனுஷ் ஒரு வருடம் கழித்து, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் தனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார். ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்தப் படத்தை உயிர்பிக்க பேச்சு வார்த்தைகள் நடந்த போதிலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க தனுஷ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

தகவலின்படி, தனுஷுடன் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். மேலும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இந்தப் படத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், விஷ்ணு விஷால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தனுஷுக்கு நெருக்கமான ஒருவர் பிரபல ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், தனுஷ் தற்போது நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்துக்குப் பிறகுதான் இந்தப் படம் தொடங்கும். விஷ்ணுவைத் தவிர வேறு எந்த நடிகர்களும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தினர் விஷ்ணு விஷாலை இது குறித்துக் கேட்க அணுகியபோது, ​​அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாராம். "இந்தப் படம் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷாலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

பொங்கலுக்கு 3 நாட்கள் முன்பே வெளியாகும் வாரிசு-துணிவு... விஜய்-அஜித் போடும் வெற்றி கணக்கு!

இதற்கிடையில், தனுஷ் அருண் மாதேஸ்வரனின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதோடு வெங்கி அட்லூரி இயக்கியுள்ள வாத்தி என்ற தமிழ்-தெலுங்கு இருமொழி படத்திற்கான வெளியீட்டிற்காகவும் காத்திருக்கிறார் தனுஷ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor dhanush, Actor Vishnu Vishal