Home /News /entertainment /

'மிஸ்ஸிங் மை பூ'... ஆறுதல் மற்றும் விழிப்புணர்வு சொன்ன விஷ்ணு விஷால்

'மிஸ்ஸிங் மை பூ'... ஆறுதல் மற்றும் விழிப்புணர்வு சொன்ன விஷ்ணு விஷால்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை சுத்தமாக நன்கு கழுவ வேண்டும். வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை முற்றிலும் தவிர்க்க முடியும் என்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளன.

அரசின் இந்த விழிப்புணர்வை பொதுமக்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வீடியோவாக வெளியிட்டு சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்து வரும் நிலையில் சிலரின் பதிவுகள் ரசிகர்களிடம் தனிக்கவனம் பெறுகின்றன.

அந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, நடிகர் விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘மிஸ்ஸிங் மை பூ’ என்று பிரிவில் வாடும் தொனியில் பதிவிட, “பரவாயில்லை. தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.



கொரோனா வேகமாக பரவி வரும் இச்சூழலில் விஷ்ணு விஷால் சமூக இடைவெளி அவசியம் என்ற கருத்தை தனது ட்விட்டர் வாயிலாக வலியுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா காலமானார்...!



Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Vishnu Vishal

அடுத்த செய்தி