யானை மீது ஏறும் காட்சி 30 டேக் எடுக்கப்பட்டது... காடு என்றாலே எனக்கு பயம் - 'காடன்' சீக்ரெட் சொல்லும் விஷ்ணு விஷால்

யானை மீது ஏறும் காட்சி 30 டேக் எடுக்கப்பட்டது... காடு என்றாலே எனக்கு பயம் - 'காடன்' சீக்ரெட் சொல்லும் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால்
  • Share this:
காடன் திரைப்படத்தில் யானை மீது ஏறும் காட்சிக்காக 30 டேக் தேவைப்பட்டது என்று நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.

தொடரி படத்தை அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. பாகுபலி படத்துக்குப் பின் நடிகர் ராணா டக்குபதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஈராஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் பெரும் பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.


கடந்த 10-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு, ஏப்ரல் 2-ம் தேதி காடன் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்தது. இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இன்று படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது பேசிய விஷ்ணு விஷால், “படப்பிடிப்பின்போது எனக்கு உடலில் ஒரு அடிபட்டது. அந்த அடிதான் உடலுக்கும் மனதுக்கும் மாற்றத்தைக் கொடுத்தது. 3 மொழிகளில் காடன் படம்  தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபு சாலமன்  தனி நபராக இருந்து இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். நான்  கடினமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். காடு,  இயற்கை என்றாலே எனக்கு பயம்.படப்பிடிப்பில் யானையுடன் நடக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் யானையை பிரியும்போது வருத்தமாக இருந்தது. அன்புக்கு உலகில் மொழியில்லை. இயற்கையான படைப்பு இது. ஒவ்வொரு படத்திற்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். இந்தப் படம் உலக சினிமாவின் அரங்கில் சென்று சேர வேண்டும். அமேசான் காட்டுத் தீ,  ஆஸ்திரேலிய தீ, வானிலை மாற்றம் என்று நிறைய செய்திகளை கொஞ்ச நாளுக்கு முன்னர் பார்த்தோம்.

இந்தப் படத்தில் ராணா தீவிரமாக உழைத்துள்ளார். பாகுபலி முடியும்போது கடினமாக உழைத்துள்ளதாக கூறிய ராணா காடன் படம் 10 பாகுபலி படத்தில் நடித்ததைப் போன்று இருந்ததாக என்னிடம் கூறினார்.  யானை மீது ஏறும் காட்சிக்காக 30 டேக் தேவைப்பட்டது. தெலுங்கு எனக்கு தெரியாது. முதலில் தமிழில் பேசும் காட்சிகளை நடித்தேன். உன்னி கிருஷ்ணன் யானைதான் இந்தப்   படத்தின் கதாநாயகன்” என்றார்.
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading