ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

படம் ஜெயிக்க கண்டன்ட் போதும்.. லவ் டுடே தான் சாட்சி.. புகழ்ந்து தள்ளியே விஷ்ணு!

படம் ஜெயிக்க கண்டன்ட் போதும்.. லவ் டுடே தான் சாட்சி.. புகழ்ந்து தள்ளியே விஷ்ணு!

கட்டா குஸ்தி

கட்டா குஸ்தி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தை செல்ல அய்யாவு இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

படம் வெற்றியடைய பிரமாண்டம் தேவையில்லை படத்தில் கண்டெண்ட் இருந்தா போதும், அதற்கு லவ் டுடே தான் சாட்சி என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தை செல்ல அய்யாவு இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ளனர்.

இப்படம் டிசம்பர் 2-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படம் தொடர்பாக படக்குழுவினர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஷ்ணு விஷால், திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும் எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக அதிக அளவில் வளர்ந்துள்ளன. திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் கண்டெண்ட் எதிர்பார்க்கிறார்கள். பிரம்மாண்டமா படம் எடுத்தாதான் ஓடும்னு கிடையாது. அதற்கு லவ் டுடே படம் தான் சாட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

Also read... பிக்பாஸ் வீட்டில் நேரடியாக மோதிக்கொள்ளும் அசீம் மற்றும் குயின்சி - வெளியானது வீடியோ!

மேலும், ஆணும் பெண்ணும் சமம் மற்றும் கணவன் மனைவி இடையே நிகழும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக கட்டா குஸ்தி படத்தில் பேசப்பட்டிருக்கிறது.  கணவன் மனைவி இடையே ஈகோவால் நிகழும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய விஷ்ணு விஷால், தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது. தொடர்ந்து தமிழ் படங்களுக்கு மற்ற திரை உலகினர் மத்தியில் காட்டப்படும் வரவேற்பிற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாக கருதுவதாகக் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vishnu Vishal