இயக்குநர் ராம்குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
'வெண்ணிலா கபடி குழு' படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால், வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். அதனால் அவரது வெற்றி விகிதம் அதிகமாகவும் உள்ளது. சமீபத்தில் செல்ல அய்யாவு இயக்கத்தில் 'கட்டா குஸ்தி' படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்தார்.
விஷ்ணுவின் கேரியரில் மிக முக்கியமான இரண்டு படங்கள் ஜாலியான 'முண்டாசுப்பட்டி' மற்றும் சைக்கோ த்ரில்லர் படமான 'ராட்சசன்'. சுவாரஸ்யமாக இந்த இரண்டு முற்றிலும் மாறுபட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம்குமார். பின்னர் அவர் சத்யஜோதி பிலிம்ஸுடன் தனுஷ் படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது ஒர்க் அவுட் ஆகவில்லை.
Thank you @SathyaJyothi @TGThyagarajan sir for your trust..
This is a ‘WINNER’ for us…
‘MARK THIS TWEET’…
Arjun Thyagarajan🤝🤝 https://t.co/sOaOa3mf2o
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) January 20, 2023
தற்போது விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் மூன்றாவது படத்தை தயாரிக்க உள்ளதாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'விவி21' என்று அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரம் விரைவில் வெளியாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vishnu Vishal