ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு - துணிவு வசூலுக்கு இப்படி அடித்துக் கொள்வதா? கடுப்பான பிரபல நடிகர்

வாரிசு - துணிவு வசூலுக்கு இப்படி அடித்துக் கொள்வதா? கடுப்பான பிரபல நடிகர்

வாரிசு - துணிவு

வாரிசு - துணிவு

வசூலை மையப்படுத்தி இருதரப்பு ரசிகர்களும் இணைய தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

படங்களின் வசூலை மையப்படுத்தி இணையத்தில் ரசிகர்கள் அடித்துக் கொள்வது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகின. ஒன்று விஜய் நடிப்பில் இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய வாரிசு. இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

மற்றொரு படம் அஜித் நடிப்பில் வெளியான துணிவு. போனி கபூர் தயாரித்த இப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்திருந்தார். இந்த இரண்டு படங்களும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இணையத்தில் பெரிய போரே நடந்து வருகிறது.

குடும்ப செண்டிமெண்டை மையப்படுத்தி இயக்கப்பட்ட வாரிசு படம் 7 நாள் முடிவில் 210 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. துணிவு படம் 200 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை மையப்படுத்தி இருதரப்பு ரசிகர்களும் இணைய தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டிலை வெல்லப்போவது விக்ரமனா அசீமா? அனல் பறக்கும் இணைய விவாதம்!

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், “உடனடியாக இதை நிறுத்துங்கள். படங்களை படமாக பாருங்கள். உங்களுடைய ஹீரோக்களை திரையில் கொண்டாடுங்கள்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vishnu Vishal, Ajith