Vishnu Vishal: விஷ்ணு விஷால் - ஜ்வாலா குட்டா திருமண தேதி அறிவிப்பு!

Vishnu Vishal: விஷ்ணு விஷால் - ஜ்வாலா குட்டா திருமண தேதி அறிவிப்பு!

விஷ்ணு விஷால் - ஜ்வாலா குட்டா

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்களை ஜ்வாலா குட்டா இருவரின் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்களை ஜ்வாலா குட்டா இருவரின் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் ப்ளேயர் ஜ்வாலா குட்டா, காதலிக்க தொடங்கியதிலிருந்தே மற்ற காதலர்களுக்கு, கப்புள் கோல்ஸை நிர்ணயித்து வருகிறார்கள். முன்னதாக 2020 செப்டம்பரில், விஷ்ணுவும் ஜ்வாலாவும் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதை வெளியுலகத்துக்கு அறிவித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.



    இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள 'காடன்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'ஆரண்யா'வின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. அதில் பேசிய விஷ்ணு விஷால், தான் ஜ்வாலா குட்டாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், விரைவில் தெலுங்கு அல்லுடுவாகப் (மருமகன்) போவதாகவும் தெரிவித்தார். அதோடு திருமண தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.

    இந்நிலையில் தற்போது அவர்களின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 22-ம் தேதி விஷ்ணு விஷால் - ஜ்வாலா குட்டா இருவரின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்கவிருக்கிறது. அதற்கான அறிவிப்பு அழைப்பிதழை விஷ்ணுவும், ஜ்வாலாவும் தங்களது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: