‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷ்ணு விஷால், தற்போது எஃப்ஐஆர், மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரபு சாலமன் நடிப்பில் விஷ்ணுவிஷால் நடித்திருக்கும் காடன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்ட விஷ்ணு விஷால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து ஆனது. இத்தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். விவாகரத்துக்குப் பின் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை விஷ்ணு விஷால் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து ஒருவருக்கொருவர் இதுவரை வெளிப்படையாக பதிலளிக்காவிட்டாலும் பிறந்தநாள் தொடங்கி காதலர் தினம் உள்ளிட்ட வாழ்வின் சிறந்த தருணங்களை ஒன்றாகவே கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மாலத்தீவுக்கு ஜூவாலா கட்டாவுடன் சென்றிருக்கும் விஷ்ணு விஷால் அங்கு எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் மழையில் நடனமாடுங்கள். அந்த நொடியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். வலியை புறந்தள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சமந்தா, ரைஸா வில்சன், சாரா அலிகான் உள்ளிட்ட நடிகைகள் பலரும் தங்கள் குடும்பத்தினரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.