Home /News /entertainment /

Vishnu Vishal: தயாரிப்பாளராக பூரண மகிழ்ச்சி - விஷ்ணு விஷால் வெளியிட்ட FIR அப்டேட்!

Vishnu Vishal: தயாரிப்பாளராக பூரண மகிழ்ச்சி - விஷ்ணு விஷால் வெளியிட்ட FIR அப்டேட்!

மோகன் தாஸ்

மோகன் தாஸ்

ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் போலீசால் தேடப்படும் அபுபக்கர் அப்துல்லா என்ற வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார்

    விஷ்ணு விஷால் நடிப்பில் எப்ஐஆர், மோகன்தாஸ் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் எப்ஐஆர் முதலில் திரைக்கு வருகிறது. விஷ்ணு விஷால் இதனை தயாரித்து, நடித்துள்ளார். நேற்று படம் குறித்த முக்கியமான அப்டேட்டை வெளியிட்டார்.

    "முதல் காப்பி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. ஆரம்ப திரையிடல்களில் பிரமாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் பூரண மகிழ்ச்சி. எங்களின் இந்தப் பயணத்தை உங்களுக்கு காட்டுவதற்காக ஆர்வத்துடன் இருக்கிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் போலீசால் தேடப்படும் அபுபக்கர் அப்துல்லா என்ற வேடத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக கௌதம் வாசுதேவ மேனன். கௌரவ் நாராயணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மஞ்சிமா மோகன் நாயகி. அவருடன் ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர். படத்தை இயக்கியிருப்பவர் மனு ஆனந்த். இவர் கௌதமின் முன்னாள் உதவி இயக்குநர்.

    கொரோனா பல இடங்களில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால், திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. சூர்யா தனது 2டி தயாரிக்கும் நான்கு படங்களை ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் போட்டுள்ளார். எப்ஐஆர் திரையரங்குகளில் வெளியானால் சிறப்பு.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vishnu vishal

    அடுத்த செய்தி