ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மறைந்த நடிகர் ஹரி வைரவன் குழந்தைகளின் கல்விக்கு உதவிய விஷ்ணு விஷால்!

மறைந்த நடிகர் ஹரி வைரவன் குழந்தைகளின் கல்விக்கு உதவிய விஷ்ணு விஷால்!

வைரவன் - விஷ்ணு விஷால்

வைரவன் - விஷ்ணு விஷால்

ஹரி வைரவன் விஷ்ணு விஷாலின் 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து காமெடி காட்சியில் கலக்கியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உயிர், சனிக்கிழமை அதிகாலையில் பிரிந்தது. அவரது நண்பரும் சக நடிகருமான விஷ்ணு விஷால் வைரவன் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார். "உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். வெண்ணிலா கபடி குழுவில் உங்களுடன் இருந்த நினைவுகள் என்றென்றும் என்னுடன் நிலைத்திருக்கும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

வைரவனின் குழந்தைகளின் கல்விச் செலவை தான் பார்த்துக் கொள்வதாக அவர் மனைவியிடம், விஷ்ணு உறுதியளித்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. அதோடு கடந்த ஆறு மாதங்களாக வைரவனின் குடும்பத்திற்கு அவர் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பூஜையுடன் தொடக்கம்!

ஹரி வைரவன் விஷ்ணு விஷாலின் 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து காமெடி காட்சியில் கலக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, குள்ளநாரி கூட்டம் மற்றும் நான் மகான் அல்ல ஆகிய படங்களிலும் துணை வேடங்களில் நடித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vishnu Vishal