மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்

தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவி ரஜினி
  • News18
  • Last Updated: November 15, 2018, 5:21 PM IST
  • Share this:
தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இவர் கடந்த 2011 டிசம்பரில் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “கடந்த ஒருவருடமாக நானும் ரஜினியும் பிரிந்து வாழ்கிறோம். தற்போது சட்டப்பூர்வமாக விவாகரத்தாகியுள்ளது. எங்களுக்கு அழகான மகன் உண்டு. அவனுக்கு அற்புதமான வாழ்க்கை அளிப்பதுதான் பெற்றோரான எங்களுக்கு முக்கியமான விஷயம். நாங்கள் இருவரும் இணைந்து அற்புதமான பலவருடங்களைக் கடந்துள்ளோம். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக ஒருவர் மீது ஒருவர் மரியாதையுடன் நடந்துகொள்வோம்.


 எங்கள் குடும்பம் மற்றும் எங்கள் மகனுக்காக எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.

“மோடிதான் பலசாலி” - ரஜினிகாந்த் - வீடியோகோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க
First published: November 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading