முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெளுத்து வாங்கும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி - வைரலாகும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி சண்டைக்காட்சி

வெளுத்து வாங்கும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி - வைரலாகும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி சண்டைக்காட்சி

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லெக்ஷ்மி

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லெக்ஷ்மி

இடைவேளையில் விஷ்ணு விஷாலை கொலை செய்ய வருபவர்களை ஐஸ்வர்யா லெக்ஷ்மி அடித்து துவம்சம் செய்யும் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி நல்ல வெற்றியைப் பதிவு செய்த படம் கட்டா குஸ்தி. செல்ல அய்யாவு இயக்கிய இந்தப் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. தெலுங்கில் இந்தப் படத்தை பிரபல நடிகர் ரவி தேஜா வெளியிட்டிருந்தார். படிக்காத, முடி நீளமாக உள்ள பெண்ணைத் தான் கல்யாணம் செய்வேன் என சில கண்டிஷன்களுடன் காத்திருக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு படித்த, முடி குறைவாக உள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மியை பொய் சொல்லி திருமணம் செய்துவைக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலை கொலை செய்ய வருபவர்களை தனது குஸ்தியால் துவம்சம் செய்து அவரை காப்பாற்றுகிறார். ஐஸ்வர்யா லெக்ஷ்மி குறித்த உண்மைகளை அறியும் விஷ்ணு விஷால் அவரை விட தான் பலமானவன் என்பதை நிரூபிக்க அவரை குஸ்தி போட்டியில் வெல்ல முயற்சிக்கிறார். அதற்காக குஸ்தியும் கற்கிறார். இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்ற கேள்விக்கு ரகளையாக பதில் சொல்லியிருக்கும் படமே கட்டா குஸ்தி. குறிப்பாக இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளும் ரெடின் கிங்ஸ்லேவின் நகைச்சுவை காட்சிகளும் வெகுவாக ரசிக்கப்பட்டன.

இடைவேளையில் விஷ்ணு விஷாலை கொலை செய்ய வருபவர்களை ஐஸ்வர்யா லெக்ஷ்மி அடித்து துவம்சம் செய்யும் காட்சிக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கட்டா குஸ்தி திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் இந்தப் படத்தின் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ரவுடிகளை வெளுத்து வாங்கும் காட்சியை யூடியூபில் பகிர்ந்துள்ளது.

' isDesktop="true" id="871587" youtubeid="yBOFZ2WiJdE" category="cinema">

ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் கடந்த வருடம் புத்தம் புது காலை விடியாதா, கேப்டன், கார்கி, பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய 5 படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் படமும் கட்டா குஸ்தி படமும் வெற்றிபெற்றன. கார்கி படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. கார்கி படத்துக்கு ஐஸ்வர்யா லெக்ஷ்மி தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Vishnu Vishal, Netflix