முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விற்பனையில் சாதனை படைக்கும் விஷ்ணு விஷால் படம்

விற்பனையில் சாதனை படைக்கும் விஷ்ணு விஷால் படம்

எப் ஐ ஆர் படம்

எப் ஐ ஆர் படம்

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எஃப் ஐ ஆர் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஷ்ணு விஷால் நடிப்பில் பிப்ரவரி 11ஆம் தேதி எப்ஐஆர் திரைப்படம் வெளியாகிறது. இந்தப்படம் எதிர்பார்த்ததைவிட நல்ல விலைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படம் எடுப்பதை விட அதை விற்பனை செய்வதுதான் இந்தக் காலகட்டத்தில் பெரும் நெருக்கடி. தமிழில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. இரண்டாம் மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்களும் இதில் அடக்கம். இப்படிப்பட்ட சூழலில் ஒரு படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தரும் விற்பனையை பெறுவது அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எஃப் ஐ ஆர் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இதன் கேரள உரிமையை இ4 என்டர்டைன்மென்ட் வாங்கியுள்ளது. இவர்கள் விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தை கேரளாவில் வெளியிட்டவர்கள். எஃப் ஐ ஆர் இன் கர்நாடக உரிமையை ஏபி பிலிம்ஸ் மற்றும் சவுரவ் கோல்டி நிறுவனங்கள் வாங்கியுள்ளன.

also read : தோனியை சந்தித்த விக்ரம்... வைரலாகும் படம்!

இன்றைய சூழலில் ஒரு திரைப்படத்தின் கேரள, கர்நாடக உரிமை அதிக இழுபறி இன்றி வாங்கப்படுவதே ஒரு சாதனைதான். எஃப் ஐ.ஆர் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது. சோனிலிவ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்கள் போட்டிப் போட்டு முக்கியமான திரைப்படங்களை வாங்கும் போது அவர்களை முந்திக்கொண்டு எப்ஐஆர் படத்தின் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது.

also read : வைரலாகும் மாளவிகா மோகனனின் பிகினி போட்டோஸ்..

படம் வெளிவரும் முன்பே ஓடிடி உரிமை விற்கப்பட்டு இருப்பது தயாரிப்பாளராக விஷ்ணு விஷாலுக்கு நல்ல செய்தி. எஃப் ஐ ஆர் திரைப்படம் மதரீதியான ஒடுக்குமுறையை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் வாசுதேவ் மேனனின் முன்னாள் உதவி இயக்குனர் மனு ஆனந்த் படத்தை இயக்கியிருக்கிறார்.

கௌதம் வாசுதேவ மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் பெப்ரவரி 11ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாகிறது.

First published:

Tags: Actor Vishnu Vishal