விஷ்ணு விஷால் தயாரித்து நடித்திருக்கும் எஃப்ஐஆர் திரைப்படம் திரையரங்கு அல்லாத வர்த்தகத்தின் மூலம் இருபத்தி இரண்டு கோடிகள் வசூல் செய்திருப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
எஃப்ஐஆர் திரைப்படம் நாளை மறுநாள் பிப்ரவரி 11-ஆம் தேதி திரைக்கு வருகிறது. மனு ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கௌதம் மேனன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இவரது முன்னாள் உதவி இயக்குனர் தான் மனு ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது முஸ்லிம் நண்பனுக்கு ஏற்பட்ட உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக விஷ்ணு விஷால் கூறியிருந்தார். தவறுதலாக தீவிரவாதி என குற்றம் சாட்டப்படும் முஸ்லிம் இளைஞன் எதிர்கொள்ளும் வன்முறையை இந்த படம் சித்தரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு இருமொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் ட்ரெய்லர் வெளியான போதே பரபரப்பாக பேசப்பட்டது. படத்தை பார்த்த தெலுங்கின் முன்னணி நடிகர்கள் ரவி தேஜா, நானி ஆகியோர் விஷ்ணு விஷாலை பாராட்டி இருந்தனர். படம் நன்றாக இருப்பதாக திரையுலகில் பேச்சு கிளம்பியதை தொடர்ந்து படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட், இந்தி டப்பிங் போன்ற உரிமைகள் நல்ல தொகைக்கு விற்கப்பட்டன. இதன் மூலம் போட்ட பட்ஜெட்டை விட அதிக பணத்தை விஷ்ணு விஷால் எடுத்துள்ளதாக
தகவல் வெளியானது. இதனை அவரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இது மீனா இல்ல... ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா?
"நாங்கள் பெரிய வர்த்தகம் செய்தோம். திரையரங்கு அல்லாத உரிமைகளின் வழியாக 22 கோடிகளுக்கான வர்த்தகத்தை செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இது சமீபத்தில் வெளியான 90 சதவீத திரைப்படங்களுக்கு கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு மற்றும் வர்த்தகம். படம் திரையரங்கிலும் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.