விஷ்ணு விஷாலின் FIR திரைப்படம் மலேசியா, குவைத் மற்றும் கத்தாரில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் நடித்திருக்கும் எஃப் ஐ ஆர் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இதன் கேரள உரிமையை இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இவர்கள் விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தை கேரளாவில் வெளியிட்டவர்கள். எஃப் ஐ ஆர் இன் கர்நாடக உரிமையை ஏபி பிலிம்ஸ் மற்றும் சவுரவ் கோல்டி நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து, ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன், கௌதம் வாசுதேவ் மேனன்,
மஞ்சிமா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக பிக் பாஸ் 5 பெண் பிரபலம் மீது புகார்
இந்நிலையில் FIR திரைப்படம் மலேசியா, குவைத் மற்றும் கத்தாரில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத பின்னணியில் உருவாகியிருக்கும் படம் என்பதால் இந்த நாடுகளில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த இடங்கள் போக தமிழகம் உட்பட மற்ற பகுதிகளில் இப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.