ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பணமோசடி வழக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை தப்பிக்கவே முடியாது - நடிகர் சூரி காட்டம்

பணமோசடி வழக்கில் விஷ்ணு விஷாலின் தந்தை தப்பிக்கவே முடியாது - நடிகர் சூரி காட்டம்

தந்தையுடன் விஷ்ணு விஷால் - சூரி

தந்தையுடன் விஷ்ணு விஷால் - சூரி

விடுதலை படத்தில் நான் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால் இதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பணமோசடி வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை அவ்வளவு எளிதாக தப்பித்து விட முடியாது எனவும், நீதிமன்றம் உரிய நியாயம் வழங்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் மற்றும் நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "ஒரு ஆண்டில் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. எந்த ஒரு பணியை எடுத்தாலும் அதை நிறைவேற்ற முதல்வர் தொடர்ந்து ஆலோசனை செய்கிறார்.

  அரசு மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு குறைவான விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்தில் வெளிப்படையான டெண்டர் அளித்து இந்த உணவகம் துவங்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆட்சியில் இதே இடத்தில் வழங்கப்பட்ட  வாடகையை 20 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, அதேசமயம் உணவு பொருட்களின் விலையும் குறைவாக இருக்கும்" என்றார்.

  இதனை தொடர்ந்து மருத்துவமனையில் பயிலும் செவிலியர்களுடன் உரையாடிய பின்னர் நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

  சினிமா பத்திரிக்கையாளரை மணக்கும் கார்த்தியின் சர்தார் பட இயக்குநர் - குவியும் வாழ்த்துகள்!

  அப்போது பேசியவர், "விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும். சமீபத்தில் ரிலீஸான படங்கள் பெற்ற அதே வெற்றியை பெற்று மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அளிக்கும். இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டு உள்ளார். விடுதலை படத்தில் நான் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. விஜய் சேதுபதியும் படத்தில் இருப்பதால் இதற்கு தனி அந்தஸ்து கிடைத்து விட்டது. இந்தியாவிலேயே முக்கியமான படமாக  விடுதலை இருக்கும். மக்களுக்கான படமாகவும், அவர்களை சிந்திக்க வைக்கும் படமாகவும் இருக்கும்" என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  திருமணத்தை நடத்திய புரோகிதர்களுக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  விஷ்ணு விஷால் தந்தை மீதான பண மோசடி வழக்கில் தன் மீது குற்றமில்லை என காவல்துறை விசாரணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,

  "குற்றத்தை நிரூபிக்க தான் நீதிமன்றமும், காவல்துறையும் உள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அது. அவ்வளவு எளிதாக யாரும் எதையும் சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. இறைவன் இருக்கிறான். இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைக்கிறேன். நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

  Published by:Arun
  First published:

  Tags: Actor Soori, Actor Vishnu Vishal