விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா திருமண கொண்டாட்டம் - போட்டோஸ்

விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா திருமணம்

விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன.

 • Share this:
  வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2011 டிசம்பரில் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஆர்யன் என்ற ஆண் குழந்தை ஒன்று இருக்கும் நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

  இதையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால் நட்பு பாராட்டி வந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆரம்பத்தில் இதை மறுத்து வந்த விஷ்ணு விஷால் ஒரு கட்டத்தில் காதலை உறுதி செய்தார். கோடையைக் கழிக்க ஜூவாலா கட்டாவுடன் மாலத்தீவுக்கு சென்று திரும்பிய விஷ்ணு விஷால் சமீபத்தில் திருமண தேதியை அறிவித்தார்.

  அதன்படி இருவீட்டார் சம்மதத்துடன் இன்று விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு முன்பான மணமக்கள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதற்கான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.
  விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக காடன் திரைப்படம் வெளியானது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்ததாக எஃப்ஐஆர், மோகன்தாஸ் ஆகிய படங்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வருகின்றன.
  Published by:Sheik Hanifah
  First published: