Home /News /entertainment /

வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பிப்ரவரி 11 அல்லது 18ம் தேதியில் வெளியிட உள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
விஷால் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என பல மாநிலங்கள் கட்டுப்பாடு விதித்தன.

இந்த நெருக்கடிகள் காரணமாக பொங்கலை ஒட்டி வெளியாவதாக இருந்த ஆர்ஆர்ஆர், வலிமை, ராதே ஷ்யாம் போன்ற பிரமாண்ட திரைப்படங்கள் தங்களுடைய வெளியீட்டு தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தன.

விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்திருந்தனர். கட்டுப்பாடுகள் காரணமாக இருபத்தி ஆறாம் தேதி படம் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வீரமே வாகை சூடும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த தேதியில் தான் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப் படத்தை வெளியிடுவதாக சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. கட்டுப்பாடுகள் காரணமாக பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் திரைக்கு வரவில்லை. அந்த தேதியில் வீரமே வாகை சூடும் திரைக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் து.பா. சரவணன் இயக்கியுள்ளார். விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி படத்தை தயாரித்துள்ளது. பார்ச்சூன் சினிமாஸ் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை வாங்கி விநியோகித்து உள்ளது படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

பாபுராஜ் போன்ற முக்கியமான மலையாள நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆக்சன் என்டர்டெயினராக தயாராகியிருக்கும் வீரமே வாகை சூடும் வெளியீட்டுக்கு முன்பே தனது டிஜிட்டல், சேட்டிலைட் மற்றும் கர்நாடகா கேரளா உரிமைகள் வழியாக சுமார் 40 கோடி வசூலித்து இருப்பதாக கூறுகின்றனர்.

Also read... திருப்தியில்லை... பாகுபலி வெப் தொடரை கைவிட்ட நெட்பிளிக்ஸ்!
வீரமே வாகை சூடும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பிப்ரவரி 11 அல்லது 18ம் தேதியில் வெளியிட உள்ளனர்.


கட்டுப்பாடுகள் தமிழகத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாலும் வார இறுதி முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டதாலும் அதிக எண்ணிக்கையில் தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor vishal

அடுத்த செய்தி