பைக்கில் பறக்கும் விஷால்... மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது ஆக்‌ஷன் டீசர்

பைக்கில் பறக்கும் விஷால்... மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது ஆக்‌ஷன் டீசர்
விஷால்
  • News18
  • Last Updated: September 13, 2019, 5:16 PM IST
  • Share this:
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

ஆம்பள படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வேதாளம், காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்த கபீர் துஹான் சிங் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகும் இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் இந்தப் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு துருக்கி, அஜர்பைஜான் உள்ளிட்ட அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஆக்‌ஷன் என்று டைட்டில் வைக்கப்பட்டு படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது.




இந்நிலையில் தற்போது ஆக்‌ஷன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது, படத்தின் டைட்டிலைப் போலவே மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் கலர்ஃபுல்லாக வெளியாகியுள்ளது படத்தின் டீசர்.

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...