ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’லத்தி’ பட டிக்கெட் வருவாயில் மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவி- விஷால்

’லத்தி’ பட டிக்கெட் வருவாயில் மாணவர்கள், விவசாயிகளுக்கு உதவி- விஷால்

விஷால்

விஷால்

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  விஷால் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த திரைப்படமும் இணையும் என படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

'லத்தி' திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தலா ஒரு ரூபாயை மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் உறுதியளித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் லத்தி. இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலரை வரும் 10-ம் தேதி பட குழுவினர் வெளியிடுகின்றனர்.

அதே சமயம் லத்தி திரைப்படத்தை தணிக்கை சான்றிதழ் அனுப்பியுள்ளனர். படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் லத்தி திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சுனைனா நாயகியாக நடித்திருக்கிறார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் செண்டிமெண்ட் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  விஷால் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த திரைப்படமும் இணையும் என படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Also read... கலர்ஃபுல் புடவையில் சொக்கவைக்கும் நடிகை ஹினா கான்!

இந்நிலையில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'லத்தி' படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இப்படம், தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது. இதையொட்டி, படத்தை பிரபலப்படுத்தும் வகையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, 8 ஆயிரம் பேருக்கு மத்தியில் பேசிய விஷால், 'லத்தி' திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தலா ஒரு ரூபாயை மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் உறுதியளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor vishal