• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திருப்பதி ஏழுமலைக்கு பாதயாத்திரையாக நடந்துசென்ற விஷால்

திருப்பதி ஏழுமலைக்கு பாதயாத்திரையாக நடந்துசென்ற விஷால்

விஷால்

விஷால்

திருப்பதி திருமலைக்கு நடிகர் விஷால் பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளார்.

  • Share this:
    ’அவன் இவன்’ படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் படம், எனிமி. மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத் குமார் படத்தை தயாரித்துள்ளார். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் எனிமியை எழுதி இயக்கியுள்ளார். எனிமியில் விஷால், ஆர்யாவுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

    ஆர்.டிராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தநிலையில் எனிமி படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்தது. சமீபத்தில் இந்தப் படம் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஷால், ‘இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக வந்துள்ளது. இந்தப் படத்தின் சண்டைக் காட்சியின்போது ஆர்யா உண்மையாகவே அடித்தார்’ என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற எனிமி திரைப்பட பிரீவியூ ஷோவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் இன்று மாலை திருப்பதிக்கு சென்றார். திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக பாதயாத்திரையாக புறப்பட்டு சென்ற அவர் இரவு திருமலையை அடைந்தார். திருமலையில் இரவு தங்கிய நடிகர் விஷால் நாளை காலை ஏழுமலையானை வழிபடுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: